Posts

தமிழ் தந்த ஆய்

தமிழ் தந்த ஆய் குடி வரலாறு சில சங்க இலக்கியங்களில் இருந்து முல்லை நிலம் என்பது காடும் காடு சேர்ந்த இடமும் முல்லை நிலத்திற்கான காலம் கார் காலம் சிறுபொழுது மாலை முல்லை நிலத்துக்குரிய கடவுள் திருமால் முல்லை நிலத்தில் கார் காலம் துவங்குகிறது இதுவே இப்பாடலின் துவக்கமாக அமைந்துள்ளது. "நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல, பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு, கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி, பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை" (1-6) இங்கு முல்லை நில கடவுள் திருமாலின் தோற்றத்தையும் கார்கால மழைப் பொழிவையும் அழகாக காட்டியிருக்கிறார் ஆசிரியர். இந்த உலகம் முழுவதும் நிறைந்து, வலப்புறமாக சுழி கொண்ட வலம்புரிச் சங்கையும் சக்கரத்தையும் கையில் கொண்டு மகாபலி சக்கரவர்த்தி இட்ட நீரைப் பெற்றதும் விஸ்வரூபமெடுத்து நின்ற திருமாலைப் போல் முகிலானது ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலிலிருந்து நீரைப்பெற்று வலப்புறமாகச் சுழன்று மலைகளை இடமாகக் கொண்டு எழுந்து மிகுந்த மழையைப் பொழிந்த சிறிய புல்லிய மாலை நேரம், பிரிவுத் துயரத்தைத் தரு...
👉 கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள். அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு  அரிய  உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்  👈🏻 👉 மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத், 'திண்ணிதாத் தெய்வ மால்,(திருமால் )👈🏻 அகநானுறு மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத், 'திண்ணிதாத் தெய்வ மால்,

ஸ்ரீ ராமன்

    சந்திர சூரியகுல ஷத்ரியர்கள் ஸ்ரீ ராமபிரான் தமிழ்கடவுளே முல்லை நில தெய்வமான திருமாலே பார்அளக்கும் தூதுசெல்லும் பைஅரவின் மேல்நடிக்கும் சீர்அகலி சாபத்தைத் தீர்க்குமே  பார் அளந்தவன் கண்ணன் தூது சென்றவன் கண்ணன் ஆகலி சாபம் நீக்கியவன் ஸ்ரீ ராமன் தசரத மைந்தன் ராமன் யார் ஆயன் தமிழ் சொல் இந்த தமிழ் சொல் ஆயன் என்று சொல்லபட்ட தசரத மைந்தன் எப்படி வடநாட்டவன் வந்தேறி ஆனான்னு தெரியலை சான்று களை பார்போம் . அயோத்தி அரசன் அரசர்கு எல்லாம் அரசன் அவன் சொங்கோல் கீழ் இல்லாத ஏழு உலகும் இல்லை இந்த கதைக்கு ஓரு இறைவன் ஆயன் ராமன் உண்மைகளையும் அறத்தையும் இறைவன் சொன்னான் . அடுத்து வேத இனம் என தெளிவெ படுத்து கிறான் இந்த உலகத்தில் இவன் கரத்தால் நனையாத தனவான்களே இல்லை உண்மையான ஆயன் வேதக்குடி வேந்தனுக்கு அவன் செய்யவேண்டிய யாகம் மறந்த்து ஏனோ என்கிறான் #அரசியற்_படலம் (168-179) அயோத்தியரசனுடைய சிறப்பியல்புகள் (168-172) 168 > அம் மாண் நகருக்கு அரசன்,- அரசர்க்கு அரசன்: செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்: இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும் மொய் மாண் கழல...

யாதவர் பற்றி

      யாதவர்     வினைவிளை கால மெனறீர் "யாதவர்" வினைவிளை வென்ன விறலோய் கேட்டி- சிலப்பதிகாரம் ( பதிகம்) தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி வாயெடுத் தரற்றிய மணிமே கலையார் "யாதவள்" துறத்தற் கேதுவீங் குரையெனக்- சிலப்பதிகாரம். கூறுக மாதோநின் கழங்கின் திட்பம் மாறா வருபனி கலுழுங் கங்குலின் ஆனாது துயருமெங் கண்ணினிது படீஇயர் எம்மனை முந்துறத் தருமோ தன்மனை உய்க்குமோ " யாதவன்" குறிப்பே.- அகநானூறு “நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன;   வேதி "யாதவர்" தம்மைவே திப்பன;  சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய;  வாதி மாலவன் காணா வளவின -  பெரிய புராணம்.  திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய ஆயவனே "யாதவனே" என்றவனை  - ஆழ்வார் பாடல். நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ உம்பரும் "யாதவரும்" படைத்த முனிவன் அவன் நீ -ஆழ்வார் பாடல். ஏதி "யாதவர்" ஏழ் திறல் கொங்கணர் சேதி ராசர் தெலுங்கர் கருநடர் ஆதி வானம் கவிந்த அவனி வாழ்- கம்பராமாயணம் .

தமிழரும் - ஆயரும்

Image
      தமிழ் மக்களில் கலை, கலாச்சாரம், பெரும் அளவில் இருந்து உள்ளது,   பழந்தமிழர் களில்    ஏழுசை  என்று அழைக்கும்   ஏழுசுரங்கள்,   உள்ளது  👉🎼 குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைத்தனர்.          🎻இவற்றை எப்படி இசைப்பது? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் உயிர் நெட்டெழுத்து ஒலிகளால் இவற்றை இசைத்தனர். இவற்றை பழந்தமிழர்கள் தங்களோட பெயரில்   👉 ஆங்கு. தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங் கோதையார் எண்று, தண்மகளை நோக்கித் தொண்றுபடு முறையால் நிறுத்தி, இடைமுது மகள்இவர்க்குப் படைத்துக்கோள் பெயர் இடுவாள் குடமுதல் இடமுறை யாக்குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என, விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே ,    கண்ணகியிடம்  ஆய் மூதாட்டி  அங்கே இருக்கும்  ஏழு  காளைகளை காட்டி அதற்க்கான கோதையர்களையும்,   இடைமகள்  மாதரி தன்னோட மகள் ஐயை அழைத்து அக்கோதையர்களை வரிசையாக நிறுத்தினர்,  அம்மகளீர்கள்,குரல், துத்த...
Image
கல்வெட்டு பூழியன்(இடையர்)  விருதுநகர் வட்டத்தில் "வெள்ளூர்' என்ற ஊரின் கண்மாயின் கரையில் தூண் ஒன்றில் காணப்படும் கல்வெட்டில், இக்கிணறு "ஆ'மன்னும் கிணறு எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது "மாடுகள் நீர் அருந்தும் கிணறு' என்பது பொருள்.  "பூழியனான இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1249) சாந்தன் கொற்றன் என்பவன் இக்கிணற்றினை தோற்றுவித்தார்.  இக்கிணற்றுக்குக் கற்கால் (கல்லால் ஆன கால்கள்), படிக்கட்டு, மாடுகளுக்கு வேண்டிய தண்ணீரை இறைக்க ஏற்றம் போன்றவற்றையும் அமைத்துத்தந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாடல் வடிவிலே அக்கல்வெட்டு காணப்படுகிறது.   கோடைகாலத்தில் குளங்களில், ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் போகும் பொழுது தாகத்துடன் வரும் மாடுகளுக்குக் கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து அளித்த செயல் போற்றத்தக்கது.  "பூ மன்னு புகட்சகரமோரா யிரத்தொரு நூற்றெழு பத்தொன்றிற்  #பூழியன்_இடையனான சுந்தர பாண்டிய தேவர்குயாண்டு பத்தோடொன்றிற்  காமன்னும் பொழில் புடைசூழ் கருநிலக்குடிநாட்டு வெள்ளூர் வாழும்  கற்பஞ்சாத்தன் சேய் கொற்றன் கருநிலக்குடிநாட்டு...
ஆயரும் - கீழடியும் ,       நீண்ட காலமா யார் தமிழன் என்ற சொல்  இருந்து கொண்டு வருகிறது, மாயோன் மேய காடுறை உலகு  முல்லை நிலத்தின் தெய்வம் ஆவான் கண்ணன், தமிழர்களின் கலாச்சாரம் என்று  கீழடி ஆய்வு தான் ஆயனின் கலாச்சாரம் சொல்லும் பேசும் படம் பழந்தமிழ் மக்கள் பயன்படுத்திய பானைகள்,  கடுமண் உருவங்கள், எருமை, பசு, ஆடு, திமில், இந்த கடுமண் உருவமும்  பழந்தமிழர்கள் வாழ்வும் இலக்கிய பாடலோடு ஒற்று போகும்,   கலித்தொகை முல்லைக்கலி  பாடல்கள் சில சான்று   👉 இ·து ஒன்று கண்டை; இ·து ஒத்தன்; கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே- மீட்டு ஒரான் போர் புகல் ஏற்றுப் பிணர் 👉இ·து ஒன்று கண்டை;  இ·து ஒத்தன்; கோ இனத்து ஆயர் மகன் அன்றே ஓவான்  👉இ·து ஒன்று கண்டை; இ·து ஒத்தன்; புல் இனத்து ஆயர் மகன் அன்றே புள்ளி மூன்று வகை ஆயர்கள் பற்றிய விவரம் இலக்கியத்தில் உள்ளது   இவ்வாறு ஆயர்கள் மூன்று வகை செல்வங்களும் வளர்ந்தனர்,   திமில்       முல்லைக்கலியில்,    சில பாடல்   " எருத்தின் ஏந்து இமில் ...