ஆயரும் - கீழடியும்,

      நீண்ட காலமா யார் தமிழன் என்ற சொல்  இருந்து கொண்டு வருகிறது,
மாயோன் மேய காடுறை உலகு

 முல்லை நிலத்தின் தெய்வம் ஆவான்
கண்ணன்,

தமிழர்களின் கலாச்சாரம் என்று  கீழடி ஆய்வு தான்
ஆயனின் கலாச்சாரம் சொல்லும் பேசும் படம்
பழந்தமிழ் மக்கள்
பயன்படுத்திய பானைகள்,  கடுமண் உருவங்கள், எருமை, பசு, ஆடு, திமில்,

இந்த கடுமண் உருவமும்  பழந்தமிழர்கள் வாழ்வும் இலக்கிய பாடலோடு ஒற்று போகும்,
  கலித்தொகை முல்லைக்கலி  பாடல்கள் சில சான்று

  👉இ·து ஒன்று கண்டை; இ·து ஒத்தன்;
கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே- மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்றுப் பிணர்

👉இ·து ஒன்று கண்டை;
 இ·து ஒத்தன்;
கோ இனத்து ஆயர் மகன் அன்றே ஓவான்

 👉இ·து ஒன்று கண்டை;
இ·து ஒத்தன்;
புல் இனத்து ஆயர் மகன் அன்றே புள்ளி

மூன்று வகை ஆயர்கள் பற்றிய விவரம் இலக்கியத்தில் உள்ளது

  இவ்வாறு ஆயர்கள் மூன்று வகை செல்வங்களும் வளர்ந்தனர்,

  திமில்

      முல்லைக்கலியில்,
   சில பாடல்

  " எருத்தின் ஏந்து இமில் குராலும் '
  முல்லைக்கலி (105.14)
       நல்ல கொழுத்த திமிலுடன்  உள்ள காளையை  குறிக்கிறது,

   " எருத்து இடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்
தோள் இடைப் புகுதந்தும் '

 முல்லைக்கலி (105: 30-34)

 காளையின் கோடு அடக்கி மார்போடு திமிலை இருக்க அனைக்குறான் ஆயன்,  என்பது பொருள்,

 " எருத்தோடு இமில் இடைத் தோன்றினன்",
காளைய அடக்கி அதன் திமில் மீது அமர்கிறான் ஆயன்,

 ஏறுதழுவும் போது காளையில்  திமிலை தான் பிடித்து தழுவ வேண்டும்
என்பது ஆயர்கள் மரபு
 தங்களோட மரநிலை இன்ப படி  ஆயர்கள்
கடுமன் உருவத்தில்  ஆநிரை செல்வங்களுடனும் திமிலையும் செதுக்கி உள்ளனர்,
 அதன் அடையாளமே  கீழடியில் திமில் உருவம் பறித்த கடுமன்,

    காளை

 கீழடியில் ஆய்வில்  கிடைத்த  காளையின்  உருவம் அமைப்பு  புலிக்குலம்  காளையின் உருவமே,
 இன்றும் ஜல்லிக்கட்டு க்கு அக்காளையே
புலிகுளம் என்ற ஊர் இன்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது அங்கே ஆயர்கள் தான் அதிகம்
 அவர்களிடம் இன்றும் கேட்டால்  புலியே குத்திக் கொன்றதால் புலிக்குலம் என்ற பெயர் பெற்றது,
 நல்ல அழகிய திமிலுடனே இருக்கும்
 அக்காளையின் கால்கள் மண்ணில் நிலையாக நிற்காமல், தன்னோட கால்களை கொண்டு பூமியை புழுதி கிளம்ப வாரிக்கொண்டே இருக்கும்,
அதை போல தன்  கொம்புகளால் குத்தி கிழித்துக்கொண்டு இருக்கும், அது தான் அதோட இயல்பும்

 அதை கலிதொகையில் காணலாம்

    " நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறு ஏற்றுச் சிலைப்பவை ',

  இந்த காளையின் குணம் அன்றே முல்லைநிலத்தில் நிலவியுள்ளது,

ஆயன் மரபும்  அவ்வாறு தான்
பழந்தமிழர் காலம் தொட்டு இன்று வரை  பசுவை வணங்குவது ஆயர்கள் மட்டும் மற்ற தமிழ் மக்கள்  மாட்டு இறச்சி  உன்னைத்தான் செய்கிறார்கள்,
யாதவர்கள் தவிர,

 இதற்க்கு கீழடி ஆதாரம் கிடைக்கும் முன்பே ஆயர்கள் வரலாறு சங்க தமிழில் உள்ளது,

  #ஆதன்
மாயன் மாயோன் மாயவன்
 ஆதன் யாதன் யாதவன்
ஆ > ஆயன் >ஆய் > ஆதன் = யாதன் [யது] = யாதவன் [செந்தமிழ் வடிவம்]

யது > யாதவா > யாதவ் [வடுக திரிபு]
ஆதன் யாதன் ஆய் என்ற இந்த பட்ட பெயர்களில் பல ஆயர்குல மன்னர்கள் இருந்துள்ளதை நம் சங்க / தங்க தமிழ் இலக்கியங்களும் பதிய மறக்கவில்லை!
பின் குறிப்பு: ஆ என்பது யா என மயங்கும்
எகா. 'ஆனை > யானை', 'ஆக்கை > யாக்கை' என்பதை போன்ற ஒலி மயக்கமே 'ஆதன் > யாதன்' என்பதும்.

  👉 ஏறுதழுவுதல்
 ஏறுதழுவு முன் சடு குடு என்ற கபாடி,
குரவை ஆடல், பொங்கல், என பல  கலாச்சாரம் ஆயர்களிடம் இருந்தே வந்து உள்ளது,

 கல், மண் தோன்றும் முன்பே முல்லை குடி

அதாவது பாறை ஓவிய வரலாறு
 எழுத்துகள் முன்பே கற்க்கால மனிதர்கள்  பாறைகளில் ஓவியமாக வரைந்தது உள்ளனர்,
 அதில் ஒன்று தான் நீலகிரி பாறை ஓவியங்களில்
http://thiru2050.blogspot.com/2013/01/3500.html?m=1

http://www.velichaveedu.com/6518-5/

இதில் இணைக்கப்பட்டு உள்ளது, ஆயர்களால் அன்றும் உருவாக்கிருக்கலா ம்,
 இந்த பாறை ஓவியம் காட்டும் விஷயம் ஏறுதழுவிய கட்சியும்,

கீழடி ஆய்வுடன்,
 ஏறுதழுதல் காட்சி சிந்து சமவெளி நாகரிகம் தொட்ட இடம் என்று கூட கூறலாம்,
 நான்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏறுதழும் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டது,

ஒரு காளையை ஒரு இளைஞர் அடக்கும் காட்சி அது
இவை இரண்டும் ஒரே இனத்தில் அடையாளம் ஆகும்
ஏறுதழும்  உண்மை ஆதாரம்
கலிதொகை,  சிலப்பதிகாரம், மலைப்படுகடகம்,  என பல சான்றுகள் உள்ளது,

  👉மென் தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே

 என்ற பாடல் கூறும் கருத்து  முல்லை நில கடவுள் மாயோன்  ஏறுதழுவிய ஆதாரம் சிந்து சமவெளி கல்வெட்டு  இரண்டை ஒப்பிடும் போது ஆயர்கள் இவ்விரண்டு  நாகரிகத்திலும் வாழ்ந்து உள்ளான்,

அதை போல அசோகர்  கல்வெட்டு தூணும்  ஒரு காலையும்  அதன் திமிலுடன் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது,

யமுனையில் ஆயர்கள்

     சிந்து சமவெளி விட்ட இடமே  சங்க இலக்கியம் தொட்ட இடமாகும்,

முல்லை நிலத்தின் கடவுள்  கண்ணன்  தென் மாவட்டத்தில் ஆயர் குடி மக்களை அமர்த்தி பாண்டிய நாட்டுக்கு தினம் ஒரு குடும்பம், நெய்  வழங்க வேண்டும் என்பதற்கு அமர்த்தி உள்ளான்  அதை இங்கே  ஆயர்குல மூதாட்டி  தான் மகள் ஐயேயிடம்  கூறுகிறார்,  இன்று மன்னனுக்கு
நெய் வழங்கவேண்டிய முறை "நம்முடையது" என்று  கூறும் பாடல்  யமுனா நதியில் வாழும் ஆயர்கள் தான் தென் தமிழகம் வாழும் ஆயர்கள்,

   "பார் அரசு ஆண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்
காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின்,
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்’ என்று,
ஐயை தன் மகளைக் கூஉய்,

  அதை போல  அகநானுறு பாடலும் சொல்லும் விஷயம்
யமுனையில் ஆயர்கள்

  வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை,
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
   மரம்செல மிதித்த மாஅல் போலப்
    புன்தலை மடப்பிடி  உணீஇயர்

யமுனா நதியில் முல்லை நில கடவுள்  கண்ணன் கோபியர்கள் மானத்தை  காக்க  குரந்தை  மரத்தை வளைத்து கோபியர் மானம் காத்தான் என்று  அகநானுறு பாடல் கூறுகிறது,

இன்னும் ஏராளம் உள்ளது,

சங்க தமிழர்கள்  முதன்மை தெய்வமாக கண்ணனும்  பலராமனுமே வணங்கி உள்ளனர்.  அதை  புறநானுறு 56/58 இரு பாடல்கள் விளக்கம்,
சிலப்பதிகாரம்  கலித்தொகை யும் விவரிக்கும்,

 துவாரகை ஆழ்கடலில் சென்ற பிறகு கண்ணனும் பாலதேவனும்  தென் தமிழகம் குடியேறி உள்ளனர்,
 இனறைய நாகர் கோவில்   பல ராமன்  என்ற பெயரிலே அழைக்கப்பட்டு உள்ளது, 
அதை உறுதி செய்ய
கடந்த வருடம் அமெரிக்கவில் மெட்ரோ  பிளக்ஸ் தமிழ் சங்கத்தின் வானொலியில்,
இந்திய தொல்லியல் துறையில் டி.கே.வி. ராஜன் குடுத்த தகவல்,

ஆயர்கள் காட்டை அழித்து விளைநிலமாக மாற்றினார்கள்,

பெரும்பாணாற்றுப்படையில்

    " ஊன்றிய மழுத்தின் வன்கை உறிக்கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச் சுவல் மேம்பால் உரைத்த ஓரி"  என்ற பாடல் விளக்குகிறது,
 (பெரும் 70-72)
ஆயர்கள் தன் கையில் இருக்கும் கோடாரி வைத்து காட்டை திருத்தி விலைநிலம் ஆக்கினார்கள்,  என்பது குறிக்கும் பாடல் இது

 உழுது உண்ணும் ஆயர்கள்
(பெரும் 187-188)
 " களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர்  குறும்சாட்டு உருளையோடு  கலப்பை சார்ந்தி நெடுச்சுவர் "
  வரகு அரிசி அரைக்க  திரி மர இயந்திரமும்
உருளை வடிவான கலப்பையும்  இருப்பதை காட்டுகிறது,

   "கரு வை வேய்ந்த கவின் குடிச் சீறூர்',
( பெறும் 91)
  "குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப்'
   (பெறும் 93)
ஆயர்கள் விவசாயம் செய்தற்க்கான  சான்று

அதே போல நற்றிணை 121 பாடல் ஆயர்கள் உழவு பற்றி உள்ளது

   " விதையர் கொன்ற முதையல் பூழி,
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் ',

தொல்காப்பியன் கூற்றுப்படி முல்லை நிலமே முதல் நிலம்,

மருத நிலத்திற்கு வேந்தனை தெய்வமாக தொல்காப்பியம் சொல்கிறது
 ஆனால் உழவுக்கு முக்கியமான இரண்டு ஆநிரை, கலப்பை  இவை இரண்டுமே முல்லை நில கடவுள் ஆகிய கண்ணன் பலராமன்
ஆநிரை க்கு கண்ணனும்
உழவுக்கு கலப்பை,
கலப்பையே கையில் வைத்து இருப்பது பலராமர் தான்  நாஞ்சில் உடையவர் என்று சங்க இலக்கியம் சொல்கிறது,

 பாலைக்கலியில்

   "கொடுமிடல் நாஞ்சிலான் தார் போல் மராஅத்து நெடுமிசைச் சுழுமயில் "

  என்றும் கூறப்பட்டு உள்ளது,
 நாஞ்சில் படை
அதாவது கலப்பையுடன் படைகளை வைத்து உள்ளார் பலராமர்,
 யாரிடமும் இல்லாத போர்படை  இவை,

ஆக ஆயர்களிடம் இருந்து பிற்காலத்தில் வந்து உள்ளது, ஆயனே ஆதியில் பார் முழுவதும் வாழ்ந்து உள்ளான்,

முல்லை நிலத்தவனே அரசு அமைத்து உள்ளான் அதை தொல்காப்பியமும் கூறுகிறது,
    பார் முழுவதும் ஆயன் மட்டும் இருந்த காரணத்தால் தான்  வள்ளுவரும்
 இனத்தின் அடிப்படையில்
 ஆயன் மட்டும் பாடியுள்ளார்

  திருக்குறள் 1228
     அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

 என்ற வள்ளுவர் பாடியுள்ளார்  இதை பார்க்கும் போது ஆயன் மட்டுமே வாழ்ந்தான் என்பதை மேலும் உருதி செய்கிறது,

#பெருமிதம் கொள்வோம்...

#கீழடி ஆய்வுக்காக தனது நிலத்தை இலவசமாக வழங்கியர் திரு கரு முருகேசகோனார்
 ஆயர்கள் வரலாறு மீட்போம்
 யது வம்சஷத்ரியர்கள்

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்