Posts

Showing posts with the label பொங்கல் ஆயர் விழா

பொங்கல் விழா

Image
பொங்கல் என்பது ஆயர்கள் திருமாலை வணங்கும் திருவிழாவா இல்லை அறுவடை திருவிழாவா விஷ்ணுவுக்குத் துவாதச நாமங்கள் என்று பன்னிரண்டு பெயர்கள் உண்டு. கேசவன், நாராயணன்,மாதவன், கோவிந்தன், விஷ்ணு,மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன் ,பத்மநாபன், தாமோதரன் என்னும் இந்தப் பன்னிரண்டு நாமங்கள் கொண்ட 12 விஷ்ணு ரூபங்களும், மார்கழி மாதம் தொடங்கி வரிசையாக ஒவ்வொரு மாதத்துக்கும் அதிபதிகள் ஆவார்கள். அவர்களை அந்தந்த மாதங்களில் வழிபடுவது ஆயர்கள் உள்ளிட்ட, திருமாலடியார்களிடம் இருந்து வந்த வழக்கமாகும். மார்கழிக்குக் கேசவனும், தைக்கு நாராயணனும் அதிபதிகள் ஆவார்கள். மார்கழியின் 30 நாட்களிலும், விடிவதற்கு முன்பே விஷ்ணுவைக் கேசவனாகத் துதித்து, பொங்கல் நெய்வேத்தியம் செய்யும் வழக்கம் இன்றுவரை இருந்து வருகிறது. இதே வழக்கம் 1000 வருடங்களுக்கு முன்பும் இருந்தது என்பதைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். மார்கழி மாதம் முழுவதும் கோயிலில் நடைபெறும் இந்த வழிபாடு, நெய்வேத்தியத்துக்காகப் பணம் கொடுத்த விவரம் கிடைத்துள்ளது.  அவ்வாறு கொடுக்கப்படும் பணத்தைச் 'சேனைக் கடை" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள...