Posts

Showing posts with the label யாதவர் தமிழ் சொல்

யாதவர் பற்றி

      யாதவர்     வினைவிளை கால மெனறீர் "யாதவர்" வினைவிளை வென்ன விறலோய் கேட்டி- சிலப்பதிகாரம் ( பதிகம்) தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி வாயெடுத் தரற்றிய மணிமே கலையார் "யாதவள்" துறத்தற் கேதுவீங் குரையெனக்- சிலப்பதிகாரம். கூறுக மாதோநின் கழங்கின் திட்பம் மாறா வருபனி கலுழுங் கங்குலின் ஆனாது துயருமெங் கண்ணினிது படீஇயர் எம்மனை முந்துறத் தருமோ தன்மனை உய்க்குமோ " யாதவன்" குறிப்பே.- அகநானூறு “நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன;   வேதி "யாதவர்" தம்மைவே திப்பன;  சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய;  வாதி மாலவன் காணா வளவின -  பெரிய புராணம்.  திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய ஆயவனே "யாதவனே" என்றவனை  - ஆழ்வார் பாடல். நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ உம்பரும் "யாதவரும்" படைத்த முனிவன் அவன் நீ -ஆழ்வார் பாடல். ஏதி "யாதவர்" ஏழ் திறல் கொங்கணர் சேதி ராசர் தெலுங்கர் கருநடர் ஆதி வானம் கவிந்த அவனி வாழ்- கம்பராமாயணம் .