Posts

Showing posts with the label ஆய் குடி

தமிழ் தந்த ஆய்

தமிழ் தந்த ஆய் குடி வரலாறு சில சங்க இலக்கியங்களில் இருந்து முல்லை நிலம் என்பது காடும் காடு சேர்ந்த இடமும் முல்லை நிலத்திற்கான காலம் கார் காலம் சிறுபொழுது மாலை முல்லை நிலத்துக்குரிய கடவுள் திருமால் முல்லை நிலத்தில் கார் காலம் துவங்குகிறது இதுவே இப்பாடலின் துவக்கமாக அமைந்துள்ளது. "நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல, பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு, கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி, பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை" (1-6) இங்கு முல்லை நில கடவுள் திருமாலின் தோற்றத்தையும் கார்கால மழைப் பொழிவையும் அழகாக காட்டியிருக்கிறார் ஆசிரியர். இந்த உலகம் முழுவதும் நிறைந்து, வலப்புறமாக சுழி கொண்ட வலம்புரிச் சங்கையும் சக்கரத்தையும் கையில் கொண்டு மகாபலி சக்கரவர்த்தி இட்ட நீரைப் பெற்றதும் விஸ்வரூபமெடுத்து நின்ற திருமாலைப் போல் முகிலானது ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலிலிருந்து நீரைப்பெற்று வலப்புறமாகச் சுழன்று மலைகளை இடமாகக் கொண்டு எழுந்து மிகுந்த மழையைப் பொழிந்த சிறிய புல்லிய மாலை நேரம், பிரிவுத் துயரத்தைத் தரு...