Posts

Showing posts with the label இடைக்காடர் பாடல்

இடைக்காடர்

Image
இடைகாடர்  பாடல்   எல்லா வுலகமு மெல்லா வுயிர்களும் எல்லாப் பொருள்களு மெண்ணரிய வல்லாள னாதி பரம சிவனது சொல்லா லாகுமே *கோனாரே*. ✍ வானியல் போல வயங்கும் பிரமமே சூனிய மென்றறிந் தேத்தாக்கால் ஊனிய லாவிக் கொருகதி யில்லையென் றோர்ந்துகொள் ளுவீர்நீர் *கோனாரே* முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது முத்திக் குறுதிகள் செய்யாக்கால் சித்தியும் பத்தியுஞ் சத்தியு முத்தியுஞ் சேரா வாகுமே *கோனாரே*. ✍ தொல்லைப் பிறவியின் தொந்தமுற் றறவே சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால் எல்லையில் கடவு ளெய்தும் பதமுமக்கு இல்லையென் றெண்ணுவீர் *கோனாரே ✍ ஆரண மூலத்தை அன்புடனே பர மானந்தக் கோலத்தைப் பன்புடனே பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப் போதத்தைச் சார்ந்திடு *கோனாரே*. காலா காலங் கடந்திடு சோதியைக் கற்பனை கடந்த அற்புதத்தை நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை நோக்கத்திற் காண்பது *கோனாரே*. ✍ சொல்லருஞ் சகல நிட்கள மானதைச் சொல்லினாற் சொல்லாமல் கோனாரே அல்லும் பகலு மகத்தி லிருந்திடிற் அந்தகன் கிட்டுமோ *கோனாரே* சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந் தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே நாரியிடப்பாகன் த...