சங்க இலக்கியத்தில் ஆயர்கள் புறநானூற்றில் ஆயர்கள் சங்க இலக்கியமான புறநாற்றில் முல்லைநில மக்கள் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறம் -05 "எருமை அன்ன கருங்கல் இடைதோறும் ஆனின் பரக்கும் யானைய முன்பின் கானக நாடனை நீயோ பெரும! விளக்கும் :- எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே! அதாவது கானகநாடன் என்பது முல்லைநில மக்களின் தலைவனை குறிக்கும் காடும் காடு சார்ந்ததும் முல்லை நிலம் அகையால் கானகநாடன் என்கிற பெயரும் உண்டு இங்கே கானக நாடன் என்பது சேரனை குறிக்கிறது, சொற்பொருள் :- எருமை – எருமை மாடுகள், அன்ன – போல, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகளைப் போல், பரக்கும் – பரவியிருக்கும், யானை – யானை, முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டினை உடையனாய், நீயோ – நீ தான், பெரும – பெருமகனே...
திருமாலும் திருமகளும் மால் என்ற சொல்லே "திரு" என்ற அடைமொழியைப் பெற்று திருமால் என்றானது. "திரு" என்ற அழகியத் தமிழ்ச்சொல் செல்வத்தின் தலைவியைக் குறித்தது. அத்தலைவியை உடையவன் என்றே "மால்", திருமால் ஆனார். மாயோன் எனத் தமிழிலக்கியங்கள் போற்றியதும் இவரையே. கண்ணன் என்ற சொல்லும் "கரியவன்" என்ற பொருளில் திருமாலையே குறித்தது. வேதங்களைவிடவும் பழமையானது திருமால் வழிபாடு. ஆதிநாராயணன் என்றும் விஷ்ணு என்றும் இவர் அழைக்கப்படுகிறார். மிகவும் பழமையான சங்க இலக்கியங்களிலும் மால், மாயோன் என்ற சொற்கள் பயின்று வருகின்றன. முல்லைப்பாட்டில் "மால்" என்ற சொல்லும், மதுரைக்காஞ்சியில் "மாயோன்" என்ற சொல்லும் வருகிறது. காடும், காடு சார்ந்த இடமுமாகத் தொல்காப்பியர் வரையறுத்த...
Comments
Post a Comment