ஸ்ரீ ராமன்


    சந்திர சூரியகுல ஷத்ரியர்கள்

ஸ்ரீ ராமபிரான் தமிழ்கடவுளே முல்லை நில தெய்வமான திருமாலே

பார்அளக்கும் தூதுசெல்லும் பைஅரவின் மேல்நடிக்கும்
சீர்அகலி சாபத்தைத் தீர்க்குமே

 பார் அளந்தவன் கண்ணன்
தூது சென்றவன் கண்ணன்
ஆகலி சாபம் நீக்கியவன் ஸ்ரீ ராமன்

தசரத மைந்தன் ராமன் யார்

ஆயன் தமிழ் சொல் இந்த தமிழ் சொல் ஆயன் என்று சொல்லபட்ட தசரத மைந்தன் எப்படி வடநாட்டவன் வந்தேறி ஆனான்னு தெரியலை சான்று களை பார்போம் .

அயோத்தி அரசன் அரசர்கு எல்லாம் அரசன் அவன் சொங்கோல் கீழ் இல்லாத ஏழு உலகும் இல்லை இந்த கதைக்கு ஓரு இறைவன் ஆயன் ராமன் உண்மைகளையும் அறத்தையும் இறைவன் சொன்னான் .

அடுத்து வேத இனம் என தெளிவெ படுத்து கிறான்

இந்த உலகத்தில் இவன் கரத்தால் நனையாத தனவான்களே இல்லை
உண்மையான ஆயன் வேதக்குடி வேந்தனுக்கு அவன் செய்யவேண்டிய யாகம் மறந்த்து ஏனோ என்கிறான்

#அரசியற்_படலம் (168-179)

அயோத்தியரசனுடைய சிறப்பியல்புகள் (168-172)

168 > அம் மாண் நகருக்கு அரசன்,- அரசர்க்கு அரசன்:
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்:
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய் மாண் கழலோன் தரும் நல் அறம் மூர்த்தி அன்னான்.

170 > மொய் ஆர்கலி சூழ் முது பாரில் முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்ந்த, யாரும்
செய்யாத யாகம் இவன் செய்து மறந்த, மாதோ!

ஒன்று வசிஷ்டர் ஆயவன் என கூற படவேண்டும் இல்லை என்றால் தசரதனை குறிப்பிட வேண்டும் .
அல்லது இறைவனை ஆயன் என குறிபிட்டு இருக்க வேண்டும் யாருனு நீங்க முடிவு பன்னிகங்க டம்ளர் யாராக இருப்பினும் ஆயன் சனாதனியே தவிர தமிழன் தனித்தவன் அல்ல.

#திருவவதாரப்_படலம் (180- 317 )

புதல்வரில்லாக்குறையைத் தசரதன் வசிட்டனுக்குக்கூறுதல் (180-183)

எப்படி வருந்துகிறான் என்பதை கம்பன் சொல்கிறான் கேளுங்கள் .

ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது, 'தொல் குலத்
தாயரும், தந்தையும், தவமும், அன்பினால்
மேய வான் கடவுளும், பிறவும், வேறும், நீ;

ஆயவன் -இடையன் - தசரதனை சொல்கிறான் ஆயவன் என
திருமாலையே நினைத்து இருக்கும் மாமுனிவனை தொழுது என வசிஷ்டரை குறிபிடுகிறான் .

#தொல்குலத்து_ஆயரும்

 ( கலித்தொகையில் தொல்குடி நட்ட நல்லினத்தயார் என்பதை கவனிக்க )
- பழமையில் வந்த வேதகால விருஷ்ணி குல மாந்தரும் .
மான அவன் தந்தையின்  தவமும் இறைவனின் அருளும் பிறவும் வேறு நீ
என்கிறான் கம்பன் .

அடுத்து என்ன சொல்கிறானு பார்கலாமா .

இதிலே கோ வேந்தன் ,கழல் கால் வேந்தன் என வரும் அடியை கவனிக்க . கோவலர் வேந்தன் அல்லது பசுகள் உடைய வேந்தன் கோவேந்தன் என
கழல் கால் வேந்தன் என உரோபதனை குறிக்கிறது .

238 > தசரதனை வரவேற்க உரோமபதன் வருதல்

கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோ வேந்தன்
      அடைந்தமை சென்று ஒற்றர் கூறக்,
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல் தானை
      புடை சூழக், கழல் கால் வேந்தன்,
செழும் தோடும் பல் கலனும் வில் வீச,
      மாகதர்கள் திரண்டு பாட,
எழுந்து ஓடும் உவகையுடன், யோசனை சென்றான்,
      அரசை எதிர்கோள் எண்ணி.

வேல் என்பது முருகன் பிறப்புக்கு முன்னாடியே கூறிய வாக்கியங்களை கவனிக்க தனித்தமிழ் பாவாடை பாவணர் பக்தர்களா கவனிங்க நீங்க கலித்தொகை பரிபாடல் படித்தால் வடிவேல் என்பது முருகனுக்கும் மட்டுமான பெயர் அல்ல என்பது புரியும் இதை ஏன் கூறுகிறேன் என்றால். திருமால் வந்தேறி கடவுள் மனு ஆரியநூல் என்று நீங்க அடித்து விடும் பொய் கதைகளுக்காக.

240 > தசரதனை உரோமபதன் நகருக்கு அழைத்து வருதல்

"யான் செய்த மா தவமோ? இவ் உலகம் செய்
      தவமோ? யாதோ? இங்கண்
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?" என,
      மனம் மகிழா, மணித் தேர் ஏற்றித்,
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச்
      செழு நகரில் கொணர்ந்தான், தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன்
      என்று உரைக்கும் உரவுத் தோளான்

241 > உரோமபதன் தசரதனுக்கு விருந்தளித்தல்

ஆடகப் பொன் சுடர் இமைக்கும் மணி மாடத்து
      இடை ஓர் மண்டபத்தை அண்ணிப்,
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர்
      பல்லாண்டு இசைப்பப், பைம் பொன் பீடம் அத்து
ஏடு துற்ற வடி வேலோன் தனை இருத்திக்,
      கடன் முறைகள் யாவும் ஈந்து,
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப,
      இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான்.

--இங்க நன்றாக கவனிக்க ஆயோர் திறல் உண்ட வடிவேலன் தசரதன்
ஆயன் தசரதன் என்று குறிப்பிடுகிறான்

244 > உரோமபதன் கலைக்கோட்டுமுனியை அயோத்திக்குப் போய்வர வேண்டுதல்

'புறவு ஒன்றின் பொருட்டு ஆகத் துலை புக்க
      பெரும் தகை தன் புகழில் பூத்த
அறன் ஒன்றும் திரு மனத்தான், அமரர்களுக்கு
      இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடி வேலான், தசரதன், என்று
      உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்,
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர்
      அடைந்து, இவண் நீ மீடல்' என்றான்.

யயாதி குலத்தின் முன்னோர்கள் இவர்கள் என ஹரி வம்சம் என்ற நூல் கூறுகிறது இந்த ஹரி வம்சம் முழுவதும் ஆயர்கள் வரலாற்றை விளக்கும் நூல் ஆகும்

1-பிரம்மா
2-மரீசி
3- காஷ்யபர்
4- சூரியன்
5- மனு
6- இக்ஷ்வாகு  (வசிஷ்டர் இவரே அயோத்தியின் முதல் அரசன் என்று சொல்கிறார். )
7- குக்ஷி
8- விகுக்ஷி
9 -பாணன்
10- அனரண்யன்
11- ப்ரீது
12- திரிசங்கு
13- துந்துமாரன்
14- யுவனாஷ்வன்
15- மாந்தாதா
16- சுசந்தி
17- த்ருவசந்தி
18- பரதன்
19- அசிதன்
20- சகரன்
21- அசமஞ்சன்
22- அம்ஷுமான்
23- திலீபன்
24- பாகீரதன்  (கங்கையைக் கொண்டு வந்தவன்)
25- ககுஸ்தன்
26- ரகு
27- பிரவ்ரித்தன்
28- சங்கனன்
29- சுதர்ஷணன்
30- அக்னிவர்ச்ணன்
31- ஷீக்ருகன்
32- மரு
33- ப்ரஷுஸ்ருகன்
34- அம்பரீஷன்
35- நஹுஷன்
36- யயாதி (யது-புரு வம்சம்)
37- நாபாகன்
38- அஜன்
39- தசரதன்
40-ராமன்

 யயாதி என்னும் அரசன், ராமனது தந்தையான தசரதனுக்குக் கொள்ளுத் தாத்தா ஆகும்

யயாதி அத்தினாபுரத்தை தலைநகராக கொண்டு குரு நாட்டை ஆண்ட மன்னன். இவன் சந்திர குல அரசன். இவனது தந்தை நகுசன், நூறு அசுவமேத வேள்விகளை செய்து முடித்தமையால் தேவ உலக இந்திர பதவியை அடைந்தவன். யயாதியின் கதை மகாபாரதம் பாகவத புராணம் மற்றும் பதினெண் புராணங்களில் மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது

யயாதிக்கும்-தேவயானிக்கும் பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள் என்றும்; இரண்டாவது மகன் துர்வசுவின் வழித்தோன்றல்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மேலும் இவர்களின் ஒரு கிளையினர் ஒழுக்கங்குன்றி அரேபிய தேசம் அடைந்து யவனர்கள் ஆயினர் என்றும்; யயாதி-சர்மித்தைக்கு பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யுவின் வழித்தோன்றல்கள் போஜர்கள் என்றும், நான்காவது மகன், அனுவின் வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் என்றும், ஐந்தாவது மகன் புரு வின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்
அசுர மன்னரின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் தேவயானியை யயாதி திருமணம் செய்து கொள்கிறான். யயாதி -தேவயானி மூலம் யது, துர்வசு என இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறது.

அசுர மன்னன் விருசபர்வன் மகளும் தேவயானியின் நெருங்கிய தோழியும் சர்மிஷ்டையை யயாதி இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான். சர்மித்தைக்கு யயாதி மூலமாக துருயு, அனு மற்றும் புரு எனும் மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர்.

இச்செய்தி கேட்ட தேவயானி, யயாதி மீது கடும் கோபம் கொண்டு , தன் தந்தையும் அசுர குருவான சுக்கிராச்சாரியிடம் தனக்கு தன் கணவன் யயாதி இழைத்த அநீதி குறித்து முறையிட்டாள். செய்தி அறிந்த சுக்கிராச்சாரி, தன் மகள் மீது கொண்ட அதிக அன்பின் காரணமாக, மன்னன் யயாதிக்கு கிழட்டுத்தன்மை அடைய சாபமிட்டார். யயாதியும் அடுத்த நொடியிலே இளமை நீங்கி கிழட்டுத் தன்மை அடைந்தான். கிழட்டுத்தன்மை அடைந்த யயாதி தனது மாமனாரும், அசுர குருவும் ஆன சுக்கிராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்டு, தான் அடைந்த கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான். அதற்கு அவர், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனின் இளமையை நீ அடைவாய் என்று கூறினார்.

பின்னர் யயாதி தனது முதல் மனைவியான தேவயானியின் மூத்த மகன் யதுவிடம், தனது மூப்பை ஏற்று இளமையை கேட்டான். யது, தந்தை யயாதியின் வேண்டுகோளை மறுக்கவே, யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கு, இனி உனக்கும் உன் தலைமுறையினரும் அத்தினாபுரத்து அரச மணிமகுடம் சூட்டிக்கொள்ளத் தகுதி இல்லாமல் போகக்கடவது என்று சாபம் இட்டார்.

பின்னர் மற்ற மகன்களான துர்வசு, துருயு, அனு ஆகியோரும் தந்தை யயாதியின் கோரிக்கையை மறுத்து விட்டனர். இரண்டாம் மனைவி சர்மிஷ்டைக்கு பிறந்த கடைசி மகனான புரு மட்டுமே யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டு, தனது இளமையை கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி முதுமை நீங்கி இளமை அடைந்து ஆயிரம் ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் இன்பம் துய்த்தான்.

ஒரு நாள், தனக்கு இளமை வழங்கி, தன் முதுமையை ஏற்றுக் கொண்ட தனது கடைசி மகன் புருவின் நினைவு வரவே, புருவை அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்து, தனது முதுமையை ஏற்றுக்கொண்டு, புருவை அத்தினாபுரத்து மன்னனாக முடி சூட்டிய பின் தனது மனைவியருடன் கானகம் ஏகி நற்றவம் செய்து தேவலோகம் அடைந்தான்.

தேவயானியின் முதல் மகனான யதுவின் வழித்தோன்றல்களே யாதவர்கள். ஸ்ரீகிருஷ்ணர் இந்த யாதவ குலத்தில்தான் தோன்றினார். யதுவின் வழித்தோன்றல்கள் வடமதுரை, விதர்ப்பம், சேதி, குந்திபோஜம், துவாரகை, சூரசேனம், மகதம் போன்ற நாட்டை ஆண்ட சிற்றரசர்களான யாதவர்கள். கம்சன், கண்ணன், பலராமர், சிசுபாலன், ஜராசந்தன், குந்தி, கிருதவர்மன், சாத்தியகி, உத்தவர் ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர்.

சர்மித்தையின் இளைய மகன் புருவின் வழித்தோன்றல்களே பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள்

வி. ச. காண்டேகர் என்பவர் யயாதியின் புராணக் கதையை, மராத்திய மொழியில் நாவலாக எழுதியுள்ளார். இதனை
 கா. ஸ்ரீ. ஸ்ரீ என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய யயாதி எனும் நாடகம்,1938ல் யயாதி திரைப்படமாக வெளியானது.

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்