குறுந்தொகை 162

கருவூர்ப் பவுத்திரன் பாடிய 162 பாடல்

      கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை! வாழியோ, முல்லை! நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று இது தமியோர் மாட்டே?

உரை;-

       முல்லை நிலத்தில் முல்லை நில தலைவி கூறிக்கொள்வது,
 மாலை நேரத்தில் ஆநிரைகள் எல்லாம் வீடு திரும்பிகிறது, கார்காலத்தில் பொய்த மழையினால் முல்லை நிலத்தில் முல்லை மலர்கள் மலர்ந்து அவைகள் என்ன பார்த்து சிரிப்பது போல பூத்து உள்ளது, அது என்னைய பார்த்து சிரிப்பது போல தோண்றுகிறது, என்னை சூடிகொள்ள மாட்டேன் என்று முல்லை மலரே இது உனக்கு தகுமா என்று முல்லை நில தலைவி தலைவன் வாரததை நினைத்து கவலையில் இப்படி என்னிகிறாள்,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்

திருமாலும் திருமகளும்