குறுந்தொகை 66

கோவர்த்தனார் பாடிய பாடல் 66
    

  மடவ மன்றதடவு நிலைக் கொன்றை

கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவைநெரிதரக்
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,
வம்ப மாரியைக் கார் என மதித்தே. 
   உரை:-
      அந்தகாலத்தில் கார்காலத்தில் தான் போர் நடக்கும், அப்படி ஒரு நேரத்தில் முல்லை நிலத்தில்  கார்காலமும் வந்து விட்டது ,  என்பதை அறிய மழைகள் கொட்டி தீர்க்க கொன்றை மலரும் தன்னோட இஷ்டத்திற்கு மலர்ந்து இருந்தது, அதை கண்டதிம் ஆய்ச்சியோ கவலை பட்டாள் கார்காலம் முன் வரவேண்டிய கணவர் வரவில்லை என்று, அதை பார்த்த தோழி சொல்கிறார், மழை   மதியின்றி கொட்டி விட்டது ஆகையால்  கொன்றை மலருக்கு புத்தி கொட்டு போயிவிட்டது, கார் காலம் வருவதற்கு முன்னாடி மலர்ந்து விட்டது, என்று கொன்றை மலரை திட்டிவிட்டு இன்னும் கார்காலம் வரவில்லை என்று சொல்லி ஆருதல் சொல்கிறார்,

துவே முல்லை நிலத்தின் வாழ்க்கை அழகாக காட்டுகிறது,

Comments