குறுந்தொகை 242

குழற்றத்தன் பாடிய பாடல் 242

    கானங்கோழிக் கவர் குரற் சேவல் 
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளேமடந்தைவேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்,
சேந்து வரல் அறியாதுசெம்மல் தேரே. 

உரை;-
   முல்லை நிலத்தில் 
தலைவி தன்னோட கணவன் இல்லாத துன்பங்களுடன் வாழ்கிறாள் ஆனால் அதுக்காக அதிலே முடங்காமல் வழ்ந்து தான் இடைச்சியினு கணவன் அந்நாட்டு அரசன் ஆணைப்படி போருக்கு சென்று விட்டான், அவன் வேகமாக திரும்பி வருவான் என்ற நிலையே என்னி வாழ்கிறாள்,
இரட்டை குரல் எழுப்பும் 
 காட்டுகோழி முல்லை மலரில் இருந்து விழும் பனிதுளிகளை உதிரும் அதை உதரி தள்ளிவிட்டு வாழும் முல்லை நிலம் அவ்வூர் அதே போல துன்பங்களை உதரிதள்ளி விட்டு வாழ்கிறாள் தலைவி

Comments