உழுது ஆயர்

உழவு செய்யும் ஆயர்கள்

   பெரும்பாணாற்றுப்படை

       முள் உடுத்து - - - எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பின் பிடிக் கணத்தன்ன குதிர்உடை முன்றில் களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர் குறும்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி நெடும் சுவர் பறைந்த புகைசூழ் கொட்டில் பருவ வானத்துப் பாமழை கடுப்பக் கருவை வேய்ந்த கவின்குடிச் சீறுர் நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன . . குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப் புகள் இணர் வேங்கை வீ கண்டன்ன - அவரை வான்புழுக்கு அட்டிப் பயில்வுற்று இன்சுவை மூரல் பெறுகுவீர் ‘ .’ - ‘

இந்த பாடல் கூறும் விளக்கம்

 ஆயர்கள் வாழும் ஊருக்குல்  செல்லும் போது  முட்களால் ஆன தொழுவும் அமைத்து அது காடுகள் போல உள்ளது,அதனுள் ஆநிரைகள்  இருக்கும்,  பிறகு ஊருக்குல் செல்லும் போது,
அங்கே, வரகு போன்ற விலை உயர்ந்த கதிர்கள் கொட்டி இருக்கும், அது காட்டு யானைகள் போல பரந்து இருக்கும் வரகு அரிசி, அவ்வாறு உழுது வாழும் ஆயர்மார்கள் வாழ்கை பரந்து இருக்கும்,
நெல்அரிசியே தினை அரிசி  முட்டிக்கொண்டு இருக்கும் கதிர்களை குனிந்து அகற்றுவது போல, வரகு அரிசி முட்டிக்கொண்டு இருக்கும் கதிர்களை அகற்ற முடியாது, அந்த அளவிற்கு வளமாக ஆயர்கள் வாழ்க்கை வளமாக இருக்கும்,

அதை அரைக்க  திரிமரம் என்னும் இயந்திரம் அங்கே இருக்குமாம்,
அத்தோற்றம் காணும் போதும்  யானை கால் போல இருக்கும்,  அந்த  இயந்திரத்தை இயக்கும் மகளீர்களுக்கு நிழல் தரும் வகையில் அம்மனை சுற்றி,
பந்தல் அமைத்து இருக்கும்,
அதை போல வீட்டில் உள்ள சுவற்றில்  தீமூட்டும் புகையினால் கரிபிடித்த நிலையில், வண்டி சக்கரம், உழவுக்கலப்பை,  சாய்த்து இருக்கும்,
அத்துடன் வீடுகளில் வரகு வைக்கோல் மேயப்பட்டு, பருவமழை காலத்தில் வானத்தில் கொண்டல்  கொண்டலாக எழும் கருமுகில் போல காட்சி அளிக்கும்,அவ்வளவு வளம் மிகுந்த ஆயர்பாடியில், புகுந்தால்  அங்கே குடுக்கும் வரகரிசி சோறும் அவரை கொட்டை பொரியலும்,  உண்டவர் வாய் மணக்கும் என்று பாடுவார்கள்,

Comments