குடவர்

குடைவர் ஆயர்

    குடவர் -ஆயர்
   குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப் புன்கம்
மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும்
நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன்தூங்கு உயர்வரை நல்நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டவர்
(அகநானூறு 393)
 👉  இடையர் அவிழாகிய சோற்றை ஆக்குவார்கள்.அதனை மதர்த்த நல்லாவின்  பாலோடு கூடியிருக்கும்.மிக்க புகழ்டைய புல்லி என்பவனது தேனிறால் தொங்கும் உயரிய பாறைகளையுடைய நல்ல நாட்டின் அப்பாலுள்ள வேங்கடமலையினைக் கடந்தும் சென்றுள்ளவர்.அவர் ஆயினும்.
     வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக்
கவடி வித்திய கழுதையே ருழவன்
குடவர் கோமான் வந்தான் நாளைப்
படுநுகம் பூணாய் பகடே மன்னர்
அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்
தொடுப்பேர் உழவ,
(சிலப்பதிகாரம்)
  👉  வடநாட்டு அரசர்களின் நிலைபெற்ற மதிலை அழித்து. கழுதை பூட்டி ஏரினை உழுது வெள்வரகை விதைத்தவன் குடவர்(இடையர்) நாட்டு கோமான் வந்தான். நாளை பகையரசர்களின் காற்றறையை நீக்குவதாகிய அரசன் பிறந்த நாடு பெரும்மங்கலமாகும் ஆகலின் பகடே நியும் நுகம்பூண்டு உழுவாய்.விழாக்கொண்டு உழும் உழுவர்.

🏹🦅 என்றியாம்
கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக்
கண்டுநம் காதலர் கைவந்தா ரானாது
உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
வில்லெழுதிய இமயத்தொடு
கொல்லி யாண்ட குடவர் கோவே.
(சிலப்பதிகாரம்)
👉 இன்னணமாக யாம் கொண்டு நிலையாகிய பாட்டினைப் பாடி ஆடுகின்ற குரவைக் கூத்தினைக் கண்டு நம் காதலர் நம் வழியிலே பட்டார்.தன் வில்லினைப் பொறித்த இமய மலையோடு கொல்லி மலையினையும் ஆண்ட குடவனே (இடையனே)கோமானே

🏹🦅 மாட மூதூர் மதுரை புக்காங்கு
இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்தக்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
குடவர் கோவே நின்னாடு புகுந்து
வடதிசை மன்னர் மணிமுடி யேறினள்
(சிலப்பதிகாரம்)

👉 மதுரை அந்நகரிடத்தே தழைவிரவிய மாலை அணிந்த பாண்டியன் அழகிய துறக்கத்தினை அடைய. கொலையுண்ட கோவலன் மனைவியாகிய கண்ணகி. இடையர் நாட்டு தலைவனே நின்னாட்டின் கண்புக்கு. வடக்கண் ஆரிய வரசரது முடித் தலையிலேறினாள்

🏹🦅 தண்கடல் படைப்பை நன்னட்டுப் பொருக செல்வூன்  தோன்று வெண்துவை முதிரை வாலூன் வல்சி மல்வர் மெய்ம்மறை! குடவர் கோவே!  கொடித்தேர் அண்ணல் வாரா ராயினும் இரவலர் வேண்டித்
              (பத்துப்பாடல் 55-9)

👉 தண்ணிய கடற்கரைப் பகுதியாகிய நல்ல நாட்டின் தலைவனே தன்னிற் கலந்த சிவந்த ஊன்கறி தோண்னுவாறு நன்றாக அரைக்கப்பெற்ற துவரையின் வெண்மையான துவையலையும், வெள்ளூன் கலந்த சோற்றையும் உண்ணும் மழவருக்கு(மல்யுத்தவிரன்) மெய்புகு கவசத்தை போன்றவன்.இடையர் நாட்டு தலைவன்.கொடி விளங்கும் தேரையுடைய முல்லைநில தலைவனை.நின் நாட்டின் வருமை எதுவும் இல்லாமையாலே உன்னை தாடி இரவல் தேடி வருபவர் இல்லாமல் போயிற்று 


🏹🦅 தொல் அருவாளர் தொழில் கேட்ப, 
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல் கெடச் சீறி மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்
மாத்தானை மற மொய்ம்பின்
 (பட்டினப் பாலை 276)
      👉  செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப் 
புன் பொதுவர் வழி பொன்ற, இருங்கோவேள்
மருங்கு சாயக்.
தொன்மையான அருவாள நாட்டு மன்னர்களில் வந்து பணிந்து அறிவுரைக் கேட்கவும், வடக்கில் உள்ள அரசர்கள் வாடவும், குட நாட்டு மன்னர் மகிழ்ச்சி குறையவும், ஆத்திரம் அடைந்து பகை மன்னர்களின் கோட்டைகளைக் கைப்பற்றவும், பாண்டிய மன்னனின் வலிமை கெடவும், செருக்கினையும் வலிமையையும் உடைய முயற்சி, பெரிய தானை, மறமுடைய வலிமை உடைமையால், சினத்தால் சிவந்த கண்களால் நோக்கி, புல்லிய முல்லை நிலத்தின் மன்னர்களின் வழிமுறை கெடவும், இருங்கோவேள் என்ற மன்னனின் சுற்றத்தார் கெடவும்,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்